×

உயிரி எரிவாயு கலன் அமைக்கும் பணியினை மேற்கொள்ள ரூ.288.51 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: உயிரி எரிவாயு கலன் அமைக்கும் பணியினை மேற்கொள்ள ரூ.288.51 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,தூய்மை இந்தியா திட்டத்தின் தொடர்ச்சியாக, நீடித்த நிலையான தூய்மைப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள ஏதுவாக 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 1-ம் நாள் தூய்மை இந்தியா திட்டம்(ந)2.0 தொடங்கப்பட்டது.அனைத்து நகரங்களையும் குப்பைகள் இல்லாத நகரங்களாகவும் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நகரங்களாகவும் மாற்றுவதே தூய்மை இந்தியா திட்டத்தின் முதன்மையான நோக்கங்கள் ஆகும்.திடக்கழிவு மேலாண்மை – செறிவூட்டப்பட்ட உயிரி எரிவாயு கலன் (Blo CNG) நகராட்சி திடக்கழிவுகளை கையாளுவதற்கு தகுந்த தொழில்நுட்பங்களின் ஒன்றான செறிவூட்டி அழுத்தப்பட்டு உருளைகளில் உயிர்-வாயு அடைக்கப்பட்டு பயன்படுத்த வகையிலான ஆலைகளை அமைத்து பராமரிக்க வேண்டியுள்ளது.

மேலும், மாநகராட்சிகளில் ஈரமான கழிவுகளை கையாளும் திறனை மேம்படுத்துவதுடன், உயிரி எரிவாயுவை தினசரி உற்பத்தி செய்தும் பயன்படுத்துவதும் ஆலையின் முக்கிய நோக்கமாகும்.9 மாநகராட்சிகளில் செறிவூட்டப்பட்ட உயிரி எரிவாயு கலன்கள் அமைக்கும் செயல் திட்டத்திற்கு, 2023-2024 சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், தஞ்சாவூர், நாகர்கோவில் மற்றும் தாம்பரம் ஆகிய 9 மாநகராட்சிகளில், உயிரி எரிவாயு தயாரிக்க, பொது -தனியார் பங்களிப்புடன் தினமும் 930 MT திறன் கொண்ட புதிய Bio CNG ஆலைகள் அமைக்கப்படும்.இதனைத் தொடர்ந்து, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப்பள்ளி, நாகர்கோவில் மற்றும் தாம்பரம் ஆகிய 6 மாநகராட்சிகளில், தனியார் பங்களிப்புடன் (Public Private Partnership) செறிவூட்டப்பட்ட உயிரி எரிவாயு கலன் அமைக்கும் பணியினை ரூ.288.51 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் ஆணையிட்டுள்ளார்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது .

The post உயிரி எரிவாயு கலன் அமைக்கும் பணியினை மேற்கொள்ள ரூ.288.51 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...